May 9 - May 15
தேவனுடைய கண்கள்!
“அன்புள்ள இயேசுவே, உமது கண்களை என்மீது பதித்து, என்னை இடைவிடாமல் கண்காணித்து வருகிற தற்காக உமக்கு நன்றி! என் நிலைமையை என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை புரிந்துகொள்ள ஒருவரும் இல்லையே என்று எண்ணி நான் வருந்தும் தருணங்கள் வருகின்றன. ஆயினும், கர்த்தராகிய உமது கண்கள் எவ்விடத்திலும் இருந்து நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை உமது வார்த்தையின் மூலம் விசுவாசிக்கிறேன். சிலவேளைகளில், என் ஜெபங்களுக்கு பதிலைப் பெற்றுக்கொள்ள சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று அறிவேன். ஆகிலும் உம்முடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாய் இருக்கிறபடியால், உமது செவிகள் என் கூப்பிடுதலை கவனித்து கொண்டிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. நான் வேதனையில் இருக்கும் போதும், தனிமையை உணரும் போதும் அல்லது மிகுந்த பலவீனமாய் இருக்கும்போதும், உமது கண்கள் என்மேல் எப்போதும் நோக்கமாய் இருக்கிறது என்பதை அறிந்து விசுவாசிக்கிறேன். உமது கண்களிலிருந்து வெளிப்படும் அன்பின் ஒளியை தொடர்ந்து என்மேல் வீசச் செய்வதற்காக உமக்கு நன்றி! உமது கண்களினால் எனக்கு வழிகாட்டி, நித்திய பாதையிலே என்னை தொடர்ந்து நடத்தும். என் இனிய இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்!”
வேத குறிப்பு: 1 பேதுரு 3:12, நீதிமொழிகள் 15:3, சங்கீதம் 32:8
வேத குறிப்பு: 1 பேதுரு 3:12, நீதிமொழிகள் 15:3, சங்கீதம் 32:8
May 2 - May 8
தேவனுடைய காருண்யம்!
“அன்புள்ள இயேசுவே, உமது அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தருளி என்னை ஆசீர்வதித்தீர். என் மீதுள்ள உமது மனதுருக்கத்தை உமது வார்த்தை வெளிப்படுத்துகிறது. உமது இரக்கத்தின் ஆழத்தையும், கரிசனையையும் புரிந்து உணர்ந்து கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் அதற்கு நான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் என்பது எனக்கு தெரியும். அப்படி இருந்தும் எனது உணர்வுகள் மற்றும் மனதின் ஏக்கங்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளீர். என் இருதயம் பாரத்தினால் நிறைந்திருக்கும் வேளையில், உமது அன்பின் கண்களை என் மீது பதித்தவாறு என் அருகில் நிற்கின்றீர் என்பதை அறிவேன். இயேசுவே, நீர் எனக்காக என் சார்பில் செயல்பட்டு அனைத்தையும் உமது சித்தத்தின் படி சரியாக நடத்தி வருகிறதற்காக உமக்கு நன்றி! நீர் என் மீது கொண்டுள்ள மனதுருக்கத்தை என்றும் மறவாத நன்றியுள்ள இருதயத்தை எனக்கு தரும்படி உம்மை வேண்டுகிறேன். உமது பிரசன்னம், அன்பு அக்கறை மற்றும் மனதுருக்கத்திற்காக உமக்கு நன்றி! இந்த வாரம் முழுவதும் என்னை தொடர்ந்து நடத்தி, என்னை ஆசீர்வாதமாக மாற்றும். இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்!"
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சமத்தேயு 9:36, சங்கீதம் 86:15, லூக்கா 7:13, ஏசாயா 40:11
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சமத்தேயு 9:36, சங்கீதம் 86:15, லூக்கா 7:13, ஏசாயா 40:11
April 25 - May 1
தேவனுடைய இரக்கம்!
“அன்புள்ள இயேசுவே, உமது பெரிய இரகத்திற்க்காக நான் உமக்கு நன்றி கூற விரும்புகின்றேன். சில சமயங்களில் என் ஆத்துமா சலிப்படைந்து முறையிட ஆரம்பித்து, நம்பிக்கையை விட்டுவிடலாம் என்று நினைக்க வைக்கிறது. ஆனால், நான் சங்கீதக்காரனைப் போல என் ஆத்துமாவுடன் பேசி, உமது அதிசயமான செயல்கள் அனைத்தையும் விவரிக்கக் கற்றுக் கொண்டேன் (42:5). என் மீதுள்ள உம் அநாதி சிநேகத்தை எப்பொழுதும் நினைவுகூற எனக்கு கிருபை தாரும். பரிசுத்த ஆவியானவரே, உமக்கு துதி கீதங்களைப் பாடி, என் ஆவி ஆத்துமா சரீரம் மற்றும் சிந்தையில் பூரண திருப்தியுடன் இருக்க எனக்கு உதவி செய்யும் (63:5). நான் உண்மையாகவே உமக்காக ஏங்கி, உம் பிரசன்னத்திற்காக வாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, என்னை நிரப்பும். என்னை ஆட்கொண்டு, உம் கிருபையினால் இந்த வாரம் முழுவதும் வழி நடத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்”.
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சங்கீதம் 63, சங்கீதம் 36:7, ஏசாயா 54:8, சங்கீதம் 117:2, சங்கீதம் 42.
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சங்கீதம் 63, சங்கீதம் 36:7, ஏசாயா 54:8, சங்கீதம் 117:2, சங்கீதம் 42.
April 18 - 24
தேவனுடைய கிரியை!
அன்புள்ள இயேசுவே, உமது வலது கரத்திற்காக உமக்கு நன்றி கூற விரும்புகிறேன் -
- என்னை உயர்த்தும் உம் கரம்,
- என்னை பிடித்து வழிநடத்தும் உம் கரம்,
- சகலமும் என் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்பதை உறுதி செய்யும் உம் கரம்,
- என்னை ஒருபோதும் விட்டு விடாமல் எப்போதும் பிடித்து தாங்கும் உம் கரம்,
- எனக்கு வெற்றியளிக்கும் உம் கரம்.
என்னை விட்டு விடாமல், உமது அன்பு மற்றும் பிரசன்னத்தின் நிச்சயத்தை கொடுத்ததற்காக உமக்கு நன்றி. உமது வலது கரத்தினால் இந்த வாரம் முழுவதும் என்னை மூடி வழிநடத்தும்படி இயேசுவின் நாமத்தினால் வேண்டி ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்."
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சங்கீதம் 63:8, சங்கீதம் 139:10, சங்கீதம் 73:23, ஆபகூக் 2:16

April 11 - 17
தேவனுடைய வலதுகரம்!

February 21 - 27
தேவனுடைய மகிழ்ச்சி!
“அன்புள்ள இயேசுவே, நான் அனுபவிப்பதற்காக நீர் எனக்கென்று ஏற்படுத்தியிருக்கும் மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி கூற விரும்புகிறேன். நீர் கொடுக்கும் மகிழ்ச்சியானது அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கும், செயல்களுக்கும், சாதனைகளுக்கும் மேலானதாக இருக்கிறது. அளவிட முடியாத மகிழ்ச்சி என்கிற அந்த பெரிய வளத்திலிருந்து எப்போதும் மகிழ்ச்சியினால் நிரம்பும்படி எனக்கு உதவியருளும். நான் எப்போதெல்லாம் கலைத்துப்போய் மிகக் கீழாக இருப்பது போல உணருகிறேனோ, அப்போதெல்லாம் உம் சமூகம் எனக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது. அதன் மூலம் அதிகமாய் பலப்படுகிறேன். உமது அன்பிற்காகவும், கரிசனைக்காகவும் இயேசுவே உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென்”
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சங்கீதம் 16:11, ரோமர் 15:13, நெகேமியா 8:1.
பயன்படுத்தப்பட்ட வேத வசனங்கள்: சங்கீதம் 16:11, ரோமர் 15:13, நெகேமியா 8:1.
January 10 - 17
தேவனுடைய திட்டம்!
"பிரியமான என் இயேசுவே, நீர் எனக்கென்று வைத்திருக்கும் அனைத்து அதிசயமான, ஆச்சரியமான திட்டங்களுக்காக உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உமது வழிகள் என் வழிகளை விட உயர்ந்தவை என்றும், உமது நினைவுகள் என் நினைவுகளை விட உயர்ந்தவை என்பதையும் நான் அறிவேன். அநேக சமயங்களில், உம் வழிகள் அனைத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால், முடிவில் குழப்பமடைந்து சோர்ந்து போகிறேன். ஆனாலும் ‘நாம் உம்மை நம்புவதையும், என் வாழ்க்கைக்கான உமது திட்டங்கள் எப்பொழுதும் என் நன்மைக்கே என நம்புவதையும்’ தெரிந்து கொள்கிறேன். அருமை ஆண்டவரே, நீர் என்னை பூரண சமாதானத்தால் நிரப்பும்படி உம்மை வேண்டுகின்றேன். ‘நீர் ஒரு காரியத்தின் துவக்கத்தின் போதே, அதின் முடிவையும் அறிந்திருக்கின்றீர்’ என்றும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நீர் கவனமாக திட்டமிட்டு நடத்துவீர் என்பதையும் அறிந்து விசுவாசிக்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, சில தவறான கதவுகளை மூடினதற்காகவும், சில தவறான நட்புகளை துண்டித்ததற்காகவும், சில தவறான யோசனைகளை தடுத்ததற்காகவும் உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நீர் எனக்கென்றே பிரத்தியேகமாக திறக்கப்போகும் அனைத்து சரியான கதவுகளுக்காக நன்றி. என் வாழ்க்கையை நான் சற்று பின் திரும்பி பார்க்கும்போது, உம் தயவையும், அன்பையும் மட்டுமே என்னால் காண முடிகிறது. நீர் என்னிடத்தில் காண்பிக்கும் அன்பையும், கரிசனையையும் பார்த்து நான் வியப்படைகிறேன். நீர் எனக்கென்று வைத்திருக்கும் திட்டங்களுக்காக உமக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன். இயேசுவே உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றேன். ஆமென்”.
பயன்படுத்தப்பட்ட வேதவசனங்கள்: ஏசாயா 55:9, ஏசாயா 26:3, ஏசாயா 46:10, எரேமியா 29:11, ஏசாயா 43:19.
பயன்படுத்தப்பட்ட வேதவசனங்கள்: ஏசாயா 55:9, ஏசாயா 26:3, ஏசாயா 46:10, எரேமியா 29:11, ஏசாயா 43:19.
January 3 - 9
தேவனுடைய வாக்குதத்தங்கள்!
"நேசர் இயேசுவே, உமது அருளாலும், அநாதி சிநேகத்தாலும் இப்புத்தாண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றேன். என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தும் மாறினாலும், நீர் மாறாத தேவன் என்றும், உம் வாக்குதத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது என்பதையும் நான் அறிந்திருக்கின்றேன். இந்த புத்தாண்டைத் துவங்குகின்ற நான், சிறிது நேரம் காத்திருந்து, நீர் எனக்கென்று கொடுத்திருக்கும் குறிப்பான வாக்குதத்தங்களுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். சங்கீதக்காரன், சங்கீதம் 119:59-ல் வேண்டுகிறபடி “நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்”. நீர் அருளிய எல்லா வாக்குதத்தங்களையும் நிறைவேற்றும்படி, அவைகளை உமக்கு முன் கொண்டு வந்து அறிக்கை பண்ணுகின்றேன். “உன்னுடன் இருப்பேன், உன்னை பாதுகாப்பேன், உன் பெலனாக இருப்பேன், உனக்கு பதில் கொடுப்பேன், உன் தேவைகளை சந்திப்பேன், உனக்கு சமாதானத்தை அருளி உன்மேல் அன்புகூறுவேன்”, என்று நீர் எனக்கும், என் குடும்பத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளை அறிக்கை செய்து வேண்டுகின்றேன். இந்த புத்தாண்டிற்கென்று வைத்திருக்கின்ற எல்லா அற்புதமான திட்டங்களுக்காக இயேசுவே உமக்கு நன்றி. உம்மை ஆராதித்து, உம் வல்லமை நிறைந்த விலையேறப்பெற்ற நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றேன். ஆமென்.”
December 27 - 31
தேவனுடைய வார்த்தை!
"அன்புள்ள இயேசுவே, இந்த ஆண்டின் முடிவில் இருக்கும் நாங்கள், உமது கரிசனைக்காக, உமது அன்பிற்காக, உமது கிருபைக்காக, உமது பாதுகாப்பு மற்றும் உமது போஷிப்பிற்காக நன்றிகூற விரும்புகிறோம். பல சமயங்களில், இதற்கு மேல் எங்களால் போக முடியாது என உணர்ந்தோம். எல்லா நம்பிக்கையையும் இழந்து போனதை உணர்ந்தோம். ஆனால் உமது ஜீவனுள்ள வார்த்தை எங்களை ஊக்குவித்து, பலப்படுத்தி இம்மட்டும் எங்களுக்கு உதவியது. இயேசுவே, எங்களுக்கு பொக்கிஷமாக இருக்கும் உமது உரைக்கப்பட்ட வார்த்தைக்கு நன்றி. "உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்”. உம்மையும், உமது நாமத்தில் இருக்கும் வல்லமையையும், இன்னும் அதிகமாய் புரிந்துக்கொள்ள உமது வசனம் எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் யார் என்பதையும், எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும் புரிந்துக்கொள்ள உமது வசனம் எங்களுக்கு உதவுகிறது. மேலும், எங்கள் பாதைகளை சீர்ப்படுத்திக்கொள்ள உமது வசனம் எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் முழுவதும் களைத்து, விடாய்த்துக் காணப்பட்ட நேரங்களில், உம் வார்த்தை எங்களுக்கு அமுதம்போல் இருந்தது. விலைமதிப்பற்ற வசனத்தின் மூலம், உம் குரலைக்கேட்டு வழிநடத்தப்படுகின்றோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் பற்றிகொள்ளும்படி, நீர் எங்களுக்கு அருளிய வேதாகமத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே உம்மை நேசிக்கின்றோம், உமது வசனத்திற்காக நன்றி உள்ளவர்களாகவும் இருக்கின்றோம். நீர் தயவுகூர்ந்து வரும் நாட்களிலும், உமது வசனத்தினால் எங்களை வளமாக்கும். நாங்கள் உம்மிலே ஆழமாக இணைக்கப்பட்டு வேரூன்றும்படி, திருவசனத்தை இரவும் பகலும் தியானிக்க எங்களுக்கு உதவுவீராக. இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினால் இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றோம். ஆமென்.”
December 20 - 26
தேவனின் அன்பு!
“அன்புள்ள இயேசுவே, மாறாமல் நிலைத்திருக்கும் உம் மகத்துவ அன்பை எப்பொழுதும் சுலபமாக எங்களால் கண்டுணர முடியாவிட்டாலும், அதற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம். அற்புதமான, அருமையான, அளவற்ற, மாறாத உம் நிபந்தனையில்லா அன்பை எங்களால் ஒருபோதும் மதிப்பிட முடியாது. நீர் எப்பொழுதும் எங்கள் மேல் கண்ணோக்கமாக இருந்து, ஏதாவது ஒரு வழியில் எங்களுக்கு உதவ ஆயத்தமாக இருக்கின்றீர். ஆனால், நாங்கள் வாழ்க்கையின் சோதனைகள், துன்பங்கள் மற்றும் இழப்புகளின்போது, நீர் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை காணத் தவறுகின்றோம். எங்களது பாவம், தோல்வி மற்றும் உடைந்த, தகுதியற்ற நிலையையும் பொருட்படுத்தாமல், எங்களுக்காக இறங்கி வந்து சிலுவையில் எங்களுக்குப் பதிலாக மரிக்க முன் வந்த உம் அன்பு எவ்வளவு விசேஷமானது! இயேசுவே, உம் நிபந்தனையில்லா அன்பிற்காக நன்றி சொல்கின்றோம். மனிதர்கள் நிபந்தனைகளோடு அன்புகூறுவதால், நிபந்தனை இல்லாத உம் அன்பை முழுவதுமாய் புரிந்துக்கொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கின்றது. பொதுவாக மனித அன்பானது, ஒருவரைக் குறித்து நமக்கு இருக்கும் உணர்வு… அல்லது அவர்கள் நம்மீது பதிலுக்கு அன்புக் கூறுவதையே சார்ந்திருக்கும். ஆனால் உம் அன்போ, நிபந்தனையற்றது. நாங்கள் செய்யும் அல்லது செய்யத் தவறும் எதுவுமே அதை மாற்றாது. தேவனே, இந்த உம் அன்பிற்கு மிகவும் நன்றி. இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினால் இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றோம். ஆமென்.”
December 13 - 19
தேவனின் தியாகம்!
“அன்புள்ள இயேசுவே, நாங்கள் வாழும்படியாக, எங்கள் பாவங்களையெல்லாம் உம்மேல் ஏற்றுக்கொண்டு, உமது ஜீவனையே எங்களுக்காக கொடுக்க முன்வரும் அளவிற்கு எங்களை நேசித்த, உமது பெரிய அன்பை எங்களால் ஒருபோதும் முழுவதுமாய் கிரகித்துக் கொள்ள இயலாது. பாவத்தின் பயங்கரத்தையும், ஒவ்வொரு மனிதனுக்காகவும் நீர் செய்த மறக்கமுடியாத தியாகத்தின் முக்கியத்துவத்தையும், நாங்கள் புரிந்துக்கொள்ளும்படி, நீர் எங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியாக, எங்களுக்காக அகோரமான மரணத்தை ஏற்றுக்கொண்டீர். ‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்!’ என்று எழுதியிருக்கிறபடி, ஒரு காலத்தில் தேவனுக்கு தூரமாகவும் அந்நியர்களாகவும் காணப்பட்ட நாங்கள், தேவனிடம் திரும்ப வரும்படி ஒரு வழியை உண்டுபண்ணினீர். எங்கள் எல்லாருடைய தண்டனைகளையும் உம்மேல் ஏற்றுக்கொள்ள நீர் முன் வந்தது ஏனோ என்று சில சமயங்களில் ஆச்சரியப்படுகிறோம்! உமது தியாகத்தின் பலனாக, நாங்கள் இனி பாவிகள் என்றோ, குற்றவாளிகள் என்றோ, தேவனால் கைவிடப்பட்டவர்கள் என்றோ அழைக்கப்படுவதில்லை. மாறாக, நீர் எங்களை நீதிமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் மாற்றியிருக்கின்றீர். நீர் எங்களுக்காக செலுத்தியிருக்கும் கிரயத்தை எங்கள் உள்ளம் திறந்து இன்றையதினம் ஏற்றுக்கொள்ளுகிறோம். உம்முடைய தியாகம் அனுதினமும் எங்களை புதிதாக்கி மறுரூபப்படுத்தட்டும். எங்களுக்குள் தொடர்ந்து கிரியை செய்து, உம்முடைய தியாகத்திற்கும் அன்பிற்கும் எங்கள் இருதயங்களை நன்றியோடிருக்க செய்யும்.
இந்த ஜெபத்தை இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஏறெடுக்கின்றோம். ஆமென்”.
இந்த ஜெபத்தை இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஏறெடுக்கின்றோம். ஆமென்”.
December 1- 5
தேவனின் உண்மை!
“அன்புள்ள இயேசுவே, உமது உண்மைக்காக நன்றி செலுத்துகின்றோம்! வாக்குதத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே”, என்று எபிரெயர் 10:23-ல் கூறப்பட்டிருக்கிறபடி நீர் எங்களுக்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருந்தபடியால், நாங்கள் மிகவும் நன்றியோடிருக்கின்றோம்.
இந்த ஆண்டின் கடைசி மாதத்திற்குள் செல்லும் போது சற்று திரும்பிப் பார்த்து, நீர் அருளிய தயவையும், ஆசீர்வாதங்களையும் நினைக்கின்றோம். உமது உண்மைகளுக்கு நாங்கள் சற்றும் தகுதியற்றவர்கள் என்றும் நன்கு அறிந்திருக்கின்றோம். ஆனால், நீரோ எங்களை காப்பாற்றுவதிலும், பாதுகாப்பதிலும், உதவி செய்வதிலும், பலப்படுத்துவதிலும், எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருந்தீர்.
தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும், வரும் நாட்களிலும், உம்முடைய சமூகம், வாக்குதத்தம் மற்றும் சமாதானம் எங்களில் நிலைத்திருக்கச் செய்யும்படி உம்மிடம் வேண்டுகின்றோம்.
இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில், இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றோம். ஆமென்”.

December 6 - 12
தேவனின் கிருபை!
"அன்புள்ள இயேசுவே, உம்முடைய கருணையினாலும், கிருபையினாலும் நாங்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றோம். ஆச்சரியமான உமது கிருபை எங்களுக்கு கிடைக்காமலிருந்தால், இப்பொழுது நாங்கள் எங்கே இருந்திருப்போம்? எங்கள் வாழ்க்கையில் அநேக முறை உமக்குப் பிரியமில்லாததை செய்து, உம் மந்தையை விட்டு தூரம் போயிருக்கின்றோம். ஆனால் நீரோ, எண்ணுக்கடங்காத தடவைகள் எங்களை மன்னித்து, கரிசனையோடு அன்பின் கரத்தால் அணைத்துக் கொண்டீர். எங்களை இரட்சிக்கும் கிருபைக்காகவும், உமது மீட்புக்காகவும் நன்றி கூறுகின்றோம். “உமது கிருபை எங்களுக்கு எப்பொழுதும் போதுமானதாக இருக்கிறது”. (2 கொரிந்தியர் 12:9). கரடுமுரடான காலங்களிலும், உமது கிருபை எங்களை தாங்கி வழிநடத்தும் என்று நிச்சயமாக அறிந்திருக்கிறோம். இதுவே, எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை. உமது கிருபையை எங்களுக்கு எப்பொழுதும் ஈந்து, மன்னிப்பு அருளினதற்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம். நாங்கள் உம்மை நேசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கின்றோம். ஆமென். "